கனடிய மக்கள் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இறைச்சி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விலை மாற்றம், உணவுப் பொருள் கொள்வனவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் தாரளமாக இறைச்சி வகைகளை கொள்வனவு செய்த மக்கள், தற்பொழுது நுகர்வினைக் குறைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் நுகர்வோர் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.
பொருளியல் ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.