வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா காவல்துறை இயக்குநர் அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவரும் வேட்பாளருமான அனுமுலா ரேவந்த் ரெட்டியை, அஞ்சனி குமார் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகளுடன், மலர்க்கொத்துகள் சகிதம் சந்தித்துள்ளார்
இதனையடுத்தே தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் குழு இந்த கடும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பாரத் ராஷ;டிர சமிதியை (பிஆர்எஸ்) ஆட்சியில் இருந்து அகற்றும் வகையில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு உயர்ந்து வந்த நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது