ஒன்றாரியோ, லண்டன் இனவெறித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிச் சடங்ககள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குடும்பம் ஒன்றின் மீது இனவெறி அடிப்படையில் இளைஞர் ஒருவர் வாகனத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தியிருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்திருந்தனர்.
முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் இந்த இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் 1.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அறிவிக்க்பபட்டு;ள்ளது.