Home கனடா அஸ்ட்ராசென்கா இரண்டாம் மருந்தளவிற்கான இடைவெளி 8 வாரங்கள்

அஸ்ட்ராசென்கா இரண்டாம் மருந்தளவிற்கான இடைவெளி 8 வாரங்கள்

by Jey

அஸ்ட்ராசென்கா இரண்டாம் மருந்தளவிற்கான இடைவெளி எட்டு வாரங்கள் என ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியின் முதலாம் மருந்தளவினை பெற்றுக் கொண்ட அனைவரும் எட்டு வாரங்களில் இரண்டாம் மருந்தளவினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பிரதம மருத்துவ அதிகாரி, ஒன்றாரியோ விஞ்ஞான ஆலோசனை பிரிவு உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த கால இடைவெளி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை முதல் மருந்தளவாக ஏற்றிக் கொண்டவர்கள், 8 முதல் 12 வார கால இடைவெளியில் இரண்டாவது மருந்தாளவாக பதிலீட்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி;ன்றது.

அஸ்ட்ராசென்கா முதல் மருந்தளவு ஏற்றிக் கொண்டவர்களுக்கு மொடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் இரண்டாம் மருந்தளவாக வழங்கப்பட உள்ளது.

related posts