அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சன்மானம் தருவதாக புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ அறிவித்துள்ளது .
2016-ல் அமெரிக்காவுக்கு மாணவ நுழைவுச்சீட்டில் சென்ற 29 வயதான மயூசி பகத் எனும் இந்திய மாணவி , ஜெர்ஸி நகரத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார்.
அவர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஏப்ரல் 29, 2019 அன்று மாலை வெளியேறியவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மே 1, 2019 பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.
அமெரிக்க உளவு அமைப்பின் நெவார்க் அலுவலகம் மற்றும் ஜெர்ஸி நகர காவல் துறை பகத் காணாமல் போன வழக்கில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அத்தோடு மாணவியின் இருப்பிடம் மற்றும் அவர் குறித்து தகவல்கள் தருபவருக்கு அமெரிக்க டாலர்கள் 10 ஆயிரம் வரை சன்மானம் அளிக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போன மாணவிக்கு ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் அவருக்குத் தெரியுமெனவும் தெற்கு பிளைன்பீல்ட் பகுதியில் அவரின் நண்பர்கள் வசித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.