கனடாவில் வீடு புதிதாக கட்டும் ஒப்பந்தக்கார நிறுவகங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.
கனடாவின் வீடு தட்டுப் பாட்டினையும், அதிக விலையேற்றத்தையும் தடுக்க புதிதாக வீடு நிர்மாணிப்பு நிறுவகங்களுக்கு , குறைந்தளவு வட்டியுடனான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்உறுதியளித்துள்ளார். வருட இறுதியை முன்னிட்டு வழங்கிய புதுவருட நற்செய்தி இதுவெனபத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். டொராண்டோ, ஒன்டாரியோவில் அதிக வீடுகளைக் கட்டுவதற்கானவாய்ப்புகள் பெருகுமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.