Home இந்தியா தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் – ரூ.100 கோடிக்கும் மேல் பாதிப்பு

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் – ரூ.100 கோடிக்கும் மேல் பாதிப்பு

by Jey

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அத்துடன், உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.

தற்போது குடிநீர் விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ.100 கோடிக்கும் மேல் பாதிப்புகள் இருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

related posts