காசாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ட்ரூடோ, அதே நேரத்தில் இஸ்ரேலுக்கும் தனது ஆதரவினைதொடர்ந்து தெரிவித்து வருபவர்.
சர்வதேச சட்டத்தின்படி தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின்உரிமைக்கு கனடா எப்போதும் ஆதரவென பிரதமர் ரூடோ தன் கீச்சக செய்தியிலும் ஏற்கனவேகுறிப்பிட்டிருந்தார்.
ஆயினும் இன்று இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, மனிதாபிமானபோர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்பில் கனடா இணைவதாக கூறியது மகிழ்வான செய்தி.
மேலும் அவரது பதிவில், ‘நிரந்தரமான போர்நிறுத்தத்திற்கான அவசர முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன், ஹமாஸ் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
மனிதாபிமான போர்நிறுத்தத்தை கனடா ஆதரிப்பதாக ஐநா தூதர் பாப் ரே சட்டசபையில் அதனை உறுதிப்படுத்தினார். , ஏனெனில் பாலஸ்தீனிய குடிமக்களின் “தொடர்ச்சியான” துன்பங்களுக்கு முற்றுப்புள்ளிவைப்பதில் இது ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.
ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாதுஎன்றும், இஸ்ரேல் அந்த பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கவோ அல்லது பாலஸ்தீனியர்களை வெளியேற்றவோமுடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.