Home கனடா தடுப்பூசி நன்கொடை கனேடியர்களை பாதிக்காது

தடுப்பூசி நன்கொடை கனேடியர்களை பாதிக்காது

by Jey

தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படுவதானது நன்கொடைகளை பாதிக்காது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு வழங்குவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகில் மிகவும் வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம், நாட்டின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை எந்த வகையிலும் பாதிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்தம் கடனாவிற்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும், உலக அளவில் ஏனைய நாடுகளுக்கு உதவி வழங்கும் பொறுப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றுவதற்கு முடியாத நிலையில் உள்ள நாடுகளுக்கு கனடா 13 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளது.

கனடா இந்த ஆண்டில் 100 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

related posts