தாய்வானில் எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, சீனா பெரியளவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என தாய்வான் தெரிவித்துள்ளது.
எனினும் சீனாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நடைபெறும் பாராளுமன்ற தேர்தல், சீனாவுடன் தாய்வான் கொண்டுள்ள உறவுகளை நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது.
தாய்வானுக்கு அழுத்தங்களை கொடுத்து தாய்வானில் தனது இறையாண்மையை நிலைநாட்டும் நோக்கில், சீனா அண்மைய ஆண்டுகளாக தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றது.
எனினும் தாய்வான், சீனாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்ற கோரிக்கையை தாய்வான் நிராகரித்துவருகிறது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், தாய்வானை சுற்றி சீனப் போர் விமானங்களும் கப்பல்களும் சுற்றி வருவதாக தாய்வான் கூறியுள்ளது.