Home உலகம் கொவிட் சட்டத்தை மீறிய பிரேஸில் ஜனாதிபதிக்கு அபராதம்

கொவிட் சட்டத்தை மீறிய பிரேஸில் ஜனாதிபதிக்கு அபராதம்

by Jey

பிரேஸில் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோ கொவிட் சட்டத்தை மீறியமைக்காக அந்நாட்டின் மாகாண அரசாங்கமொன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முக கவசம் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் கொரோனா பாதிப்பு விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல், அதிக அளவில் ஆட்களை திரட்டி பேரணியில் ஈடுபட்டதாக கூறி மாகாண நிர்வாகம் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோவுக்கு 100 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது.

பிரேசிலில் இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.

அதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோவின் அலட்சிய போக்கே இந்த சுகாதார நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

related posts