ஆபிரிக்க நாடான லைபீரியாவில் உள்ள டொயோட்டாவில் எண்ணெய் கொள்கலன் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 83 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லைபீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து பெட்ரோல் கசிவதை கண்டு மக்கள் பெட்ரோலை சேகரிக்க சென்றிருந்த போது கொள்கலன் திடீரென வெடித்து இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர தீ விபத்தில் 40 பேர் பலியாகினர். 83 பேர் படுகாயமடைந்தனர். எண்ணெய் கொள்கலன் கவிழ்ந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.