Home உலகம் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு

by Jey

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கினை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 21,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அளித்த விண்ணப்பத்தில், ‘காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை’ என தென் ஆப்பிரிக்கா விவரித்துள்ளது.

related posts