ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வினால் அங்கு இருக்கும் கனடிய மக்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கனடிய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மேற்கு கரை தீவுப்பகுதியில் 7.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக கனடியர்கள் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ இதுவரையில் தெரியவரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வில் பாதிக்கப்பட்ட கனடியர்கள் ஜப்பானுக்கான கனடிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.