Home கனடா ஒன்றாரியோ – கியூபெக் எல்லைகளுக்கு இடையிலான கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது

ஒன்றாரியோ – கியூபெக் எல்லைகளுக்கு இடையிலான கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது

by Jey

ஒன்றாரியொ – கியூபெக் மாகாணங்களுக்கு இடையில் தற்பொழுது அமுலில் உள்ள கட்டுப்பாடு விரைவில் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இரண்டு மாகாணங்களினதும் நிர்வாகங்களும் அறிவித்துள்ளன.

கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு மாகாணங்களுக்கும் இடையிலான அத்தியாவசியமற்ற பயணங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளின் மூலம் சோதனைகளை நடாத்தி வருகின்றனர்.

பயணத் தடை நீக்கம் மகிழ்ச்சி அளிக்கின்றது என ஒட்டாவா மாகாண மேயர் ஜிம் வெட்சன் தெரிவித்துள்ளார்.

related posts