Home கனடா உலகில் அதிகளவில் தடுப்பூசி ஏற்றிய நாடுகளின் வரிசையில் கனடா முன்னணி

உலகில் அதிகளவில் தடுப்பூசி ஏற்றிய நாடுகளின் வரிசையில் கனடா முன்னணி

by Jey

உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றிய நாடுகளின் வரிசையில் கனடா முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கனடாவில் நாளாந்த கொவிட் நோய்த் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரமாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த எண்ணிக்கை 90 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

கனடாவின் மொத்த சனத்தொகையில் சுமார் 65 வீதமானவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு கொவிட் தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலக நாடுகளில் தனது மொத்த சனத் தொகையில் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றிய நாடுகளின் வரிசையில் கனடா முதலாம் இடத்தை வகிக்கின்றது.

இரண்டாவது இடத்தை இஸ்ரேலும், மூன்றாவது இடத்தை பிரித்தானியாவும் வகிக்;கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

related posts