கனடாவில் தற்போது அதிக அளவு கோவிட் வைரஸ் ஜே1 திரிபு பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் வைரஸ் அதிகளவு பரவி வருவதால் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு சுகாதார சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ் வைரஸ் தொற்று வீரியமிக்கதாகவும் பல உப பிரிவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகிறது என மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.
எனினும், கனடாவில் இதுவரையில் இந்த திரிபு காரணமாக நோயாளர்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.