Home உலகம் வட கொரியா மேற்குக் கடற்கரையில் நேரடி துப்பாக்கிச் சூடு

வட கொரியா மேற்குக் கடற்கரையில் நேரடி துப்பாக்கிச் சூடு

by Jey

வட கொரியா தொடர்ந்து மூன்றாவது நாளாக தென் கொரியாவின் எல்லைத் தீவான யோன்பியோங் கடல் எல்லைக்கு அருகே நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், குடியிருப்பாளர்களை வீட்டின் உள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா மேற்குக் கடற்கரையில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை நடத்திவருவதாக தென்கொரிய இராணுவம் மேலதிக விபரங்களை வெளியிடாமல் கூறியுள்ளது.

தென் கொரிய அரசின் குறுஞ்செய்தி அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது வட கொரியவின் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

related posts