Home இந்தியா அருப்புக்கோட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 15 பேர் காயம்

அருப்புக்கோட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 15 பேர் காயம்

by admin
செட்டிக்குறிச்சி கிராமத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றபோது.செட்டிக்குறிச்சி கிராமத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றபோது.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் இன்று (திங்கள்கிழமை) மாலை இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்களால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரிடையே மோதல், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.
செட்டிக்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, அப்பகுதியில் சின்ன செட்டிகுறிச்சியைச் சேர்ந்த பாண்டிக்கண்ணன்(27), பரத்(21) ஆகிய இரண்டு இளைஞர்களும், ஒரு பைக்கில் செட்டிக்குறிச்சி கிராமத்திற்குள் வேகமாக வந்து கெங்கராஜ் எனும் ஒரு பெரியவர் மீது மோதும் விதமாகவும் சென்றதாகவும் கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட பெரியவர் அந்த இளைஞர்களைக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் பைக்கில் வந்த இளைஞர்களுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களது கிராமத்தினர் சின்ன செட்டிக்குறிச்சியிலிருந்து ஆயுதங்கள், கற்களுடன் வந்து  செட்டிக்குறிச்சி கிராமத்தினருடன் மோதியும், கல்வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அருப்புக்கோட்டை காவல்துறை அதிகாரிகள் சென்று இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்தினர். அதே வேளையில் தாக்குதலின் போது இருதரப்பினரும் சேர்த்து மொத்தம் 15 பேர் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சங்கரேஸ்வரி(42), கூடலிங்கம்(49), ஊர்க்காவலன்(59), முத்துராஜ்(38), நாகேந்திரன்(46), வீரசின்னு(42), முத்துலட்சுமி(38), சுப்புலட்சுமி(50), வரதராஜப் பெருமாள்(32), வெள்ளைத்தாய்(37), சக்திக்குமார்(25), பாலமுருகன்(29) என ஒரு தரப்பினரும், மேலும் பாஸ்கரன், மனோகரன், அருண்குமார் என மற்றொரு தரப்பினரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து செட்டிக்குறிச்சி பகுதியில் 50க்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

related posts