வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேகநபர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
தோணிக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.
தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எரியுண்ட வீட்டு உரிமையாளர், பிரதான சந்தேக நபரை அச்சுறுத்தியதாக, நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கு நீதிவானால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.