Home உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் கியூபா

கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் கியூபா

by Jey

கியூபா எரிபொருள் விலையினை ஐந்து மடங்காக அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

கியூபா அரசாங்கம் எரிபொருள் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 25 கியூப பெசோவில் இருந்து, 132 பெசோவாக அதிகரிக்கப்படவுள்ளது.

டீசல் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்று கியூப நிதி அமைச்சர் விளாடிமிர் ரெகுரோ குறிப்பிட்டுள்ளார்.

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள முக்கிய நுகர்வோருக்கு 25% மின்சார விலையை உயர்த்துவதாகவும், இயற்கை எரிவாயுக்கான விலையை உயர்த்துவதாகவும் அவர் அறிவித்தார்.

related posts