இந்தியாவின் வட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.
இது இயல்பான வெப்பநிலையை விட 6 டிகிரி குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
டெல்லியில், நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது.
இதேபோன்று, டெல்லியில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. டெல்லியில் நேற்று மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டது.
டெல்லியில் காற்று தரம் மிக மோசம் என்ற அளவில் பதிவாகி இருந்தது. டெல்லியின் பல பகுதிகளில் குளிர் பரவி வருகிறது.
இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று ரெயில் சேவையும் பாதிப்படைந்து உள்ளது. சாலையோரம் வசிப்பவர்களை இரவு கூடாரங்களில் தங்க வைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
வடபகுதிகளான பஞ்சாப், அரியானா, சண்டிகார், உத்தர பிரதேசத்தில் காலையில் சில மணிநேரம் வரை அடர்ந்த பனிக்கான சூழல் காணப்படுகிறது.