அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தடைப்பட்ட சுகாதார சேவைகளை மீளமைக்க 500 இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகளை இடையூறு இன்றி மீளமைக்குமாறு சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கமைய இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.