ஜீ7 மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் நாடு திரும்பிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தனிமைப்படுத்திக் கொண்டதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென்ற உத்தரவினை அரசாங்கம் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவிற்கு அமைய அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் ட்ரூடோ தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு;ள்ளார்.
ஐரோப்பிய விஜயத்தை முடித்துக் கொண்ட பிரதமர் ட்ரூடே மற்றும் குழுவினர் இன்றைய தினம் நாடு திரும்பியதுடன் ஒட்டாவாவிற்கு அருகாமையில் அமைந்துள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
பதினான்கு நாட்கள் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டனர்.