Home இந்தியா காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்து – ஜெய்சங்கர்

காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்து – ஜெய்சங்கர்

by Jey

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்டனி பிளிங்கன் பேசியதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதனை எதிர்த்து அமெரிக்க இராணுவத்தின் போர் கப்பல்கள் செங்கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்டனி பிளிங்கன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இருவரும் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து விவாதித்தனர்.

related posts