Home உலகம் பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்

by Jey

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,மூன்று பேர் காயமடைந்திருப்பதாக பாகிஸ்தான் ஊடாகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் ஈரானிய எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக சமூக ஊடகங்கள் வழியாக அறியமுடிகின்றது.

related posts