Home விளையாட்டு சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து முறை சதம் பெற்ற முதல் வீரர்

சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து முறை சதம் பெற்ற முதல் வீரர்

by Jey

பெங்களூருவில் நேற்று(17) நடைபெற்ற ரி-20 கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதுடன், சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து முறை சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய மூன்றாவது ரி-20 போட்டியில் ரோஷித் 69 பந்துகளில், 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ரி-20 தொடரின் கடைசி போட்டியான இதில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ரி – 20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும், தொடரின் ஆட்டநாயகனாக சிவம் டூபேவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

related posts