Home கனடா கனடாவில் ஏதிலி முகாம்களின் நிலைமைகள் குறித்து அதிருப்தி

கனடாவில் ஏதிலி முகாம்களின் நிலைமைகள் குறித்து அதிருப்தி

by Jey

கனடாவில் இயங்கி வரும் ஏதிலி முகாம்களின் நிலைமைகள் குறித்து அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் என்பன கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

முகாம்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்படுகி;ன்றது எனவும் நிற ரீதியான ஒடுக்குமுறைகள் முகாம்களில் அதிகளவில் காணக்கிடைப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கனடாவில் ஆயிரக் கணக்கான ஏதிலிக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

உலகின் முதனிலை மனித உரிமை அமைப்புக்களான இந்த இரண்டு அமைப்புக்களும் கனடாவின் ஏதிலி முகாம் நிலைமைகள் குறித்து அறிக்கையிட்டுள்ளன.

பாதுகாப்பு நோக்கில் கனடாவிற்குள் பிரவேசிப்போர் கைவிலங்கிடப்பட்டு, வெளி உலகுடன் தொடர்பற்ற நிலையில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் செழுமையான பல்வகைமை, சமத்துவம் போன்ற பெருமிதங்களுக்கு முற்றிலும் முரணான வகையில் ஏதிலி முகாம்களில் ஏதிலிகள் நடாத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020ம் ஆண்டு மார்ச்தம் வரையில் 8825 பேர் ஏதிலி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் சாதாரண கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts