அர்ஜென்டினாவில் சுபுட் மாகாணத்தில் லாஸ் லர்செஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா, 1 இலட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் அளவில் பரந்து விரிந்துள்ளது.
இந்த பூங்கா, பல்லாயிரக்கணக்கான அரியவகை உயிரினங்களுக்கும் பழமையான மரங்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறது.
இதன் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்த பூங்காவை உலக பராம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம்(27) திடீரென தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் அருகே காட்டுத்தீ உருவானது.
தீயானது சற்று நேரத்தில் பரவ தொடங்கியதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
காட்டுத்தீ காரணமாக இதுவரை 600 ஹெக்டர் அளவில் சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமை கொண்டு வரமுடியாத காரணத்தினால் அண்டை நாடுகளின் உதவியை பெற அர்ஜென்டினா அரசு முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.