Home கனடா காசா போரின் போது பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு தவறிய கனடிய பிரதமர்

காசா போரின் போது பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு தவறிய கனடிய பிரதமர்

by Jey

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கனடிய முஸ்லிம்களுக்கான தேசிய பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் பிரதமருடனான சந்திப்பினை ரத்து செய்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ட்ரூடோவுடனான சந்திப்பில் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் பிறவுண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காசா போரின் போது பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு கனடா உரிய பங்களிப்பினை செய்யத் தவறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் பிரதமரை சந்திப்பதில் பயனில்லை எனவும் இதனால் சந்திப்பினை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

related posts