வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்திலுள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தின் குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு இரட்டை அடுக்கு பஸ், வடமேற்கு மெக்சிகோவில் எலோடா முனிசிபாலிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ட்ரக்கின் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குறித்த பஸ் அங்கேயே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததுடன் 22 பேர் காயமடைந்தனர்.
எரிந்த நிலையில் உள்ள சடலங்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தி அடையாளம் காணும் பணியை ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.