ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.
பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன.
அவற்றில் , பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. அதன்படி நாளை பெப்ரவரி 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.