இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹர்தாவிலுள்ள கேளிக்கை வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இத் தொழிற்சாலை வெடிவிபத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 175ஆகவும் அதிகரித்துள்ளது.