வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் உள்ள கோன் ப்லாங் மாவட்டத்தில் இன்று(07) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி காலை 8.41 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.