இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடியமையால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அச்சமடைந்திருப்பதாக ஜே.வி.பி. எனப்படும் எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் தமது இந்திய பயணம் தொடர்பில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முரண்பாடு இருப்பதால் இருவரும் ஒன்றுசேர முடியாது.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா, சஜித் போன்ற தலைவர்கள் ஒரே மேடைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா அழைத்து பேசியதால் அச்சமடைந்துள்ள இந்த அரசியல் தலைவர்கள் ஜே.வி.பியை ஓரம் கட்டுவதற்காக ஒரேமேடைக்கு வருவார்கள் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.