அல்பர்ட்டா மாகாணத்தில் கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட உள்ளதாக மாகாண முதல்வர் ஜேசன் கென்னி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி கொவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், கனடாவில் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் முதல் மாகாணமாக அல்பர்ட்டா அறிவிக்கப்பட உள்ளது.
மாகாணத்தின் 70.2 வீதமான அல்பர்ட்டா பிரஜைகளுக்கு முதல் மாத்திரை கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக முதல்வர் கென்னி தெரிவித்துள்ளார்.
இதன்படி கனேடிய தினமான ஜூலை மாதம் 1ம் திகதி கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதி வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாம் கட்ட கொவிட் தளர்வுகளின் அடிப்படையில் சமூக ஒன்றுகூடல் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.