இந்தியாவின் ஷம்பு எல்லையிலிருந்து டில்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பேரணியால் டில்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் விவசாயிகள் டில்லி செல்வதைத் தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டில்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் ‘சலோ டில்லி’ போராட்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இளைஞர்கள் குழு அம்பாலாவில் உள்ள சம்பு எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைக்க முயன்றபோது ஹரியாணா பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தியுள்ளது. விவசாயிகள் ஷம்பு எல்லைக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.