Home உலகம் ஐ.நா பொதுச் செயலாளராக குட்டரெஸ் மீண்டும் தெரிவு

ஐ.நா பொதுச் செயலாளராக குட்டரெஸ் மீண்டும் தெரிவு

by Jey

போர்ச்சுகலின் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (António Guterres) ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 9 ஆவது பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் (72) கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார்.

இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தெரிவு செய்யும் பணிகள் நடந்தன.

சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெஸையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டம் நேற்று (18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடரும்.

related posts