டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையானது இந்தியாவில் சிறிய சில்லறை கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அமுலில் இருந்து வருகிறது.
வாடிகையாளர்கள் தம்வசம் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. UPI பணம் செலுத்தும் முறை இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், மாறிவரும் தொழில்நுட்பத்தைக் கருத்தில் கொண்டு, UPI டிஜிட்டல் பணம் செலுத்தல் முறை வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நாட்டின் நாணயத்தை தம்வசம் கொண்டு செல்ல தேவையில்லை.
இந்தியாவில் மட்டுமின்றி, தற்பேது இலங்கை, பூட்டான், மொரிஷியஸ், பிரான்ஸ், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், சிங்கப்பூர் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் UPI மூலம் கட்டணத்தை செலுத்த முடியும்.
இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPIமூலம் பணம் செலுத்தலாம். மொரிஷியஸிலும் இந்தியர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.