இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்திய கடற்றொழிலாளர்களின் விடுதலை தொடர்பில் இலங்கை – இந்தியா இடையே விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஐவரில் மூவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், இருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை விடுவிப்பது தொடர்பிலேயே இன்று (25) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.