றொரொன்டோவின் ரெக்ஸ்டெலில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டமொன்றில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவரும் மூன்று சிறார்களும் காயமடைந்துள்ளனர்.
ஒரு வயதான குழந்தையொன்றின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதலில் அந்தக் குழந்தையும் காயமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது எத்தனை பேர் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.