Home உலகம் பாலஸ்தீனத்தில் முடிவுக்கு வராத போர் மற்றும் உணவுப் பற்றாக்குறை

பாலஸ்தீனத்தில் முடிவுக்கு வராத போர் மற்றும் உணவுப் பற்றாக்குறை

by Jey

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.

இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, நவம்பர் இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணையக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணையக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணையக் கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்துள்ளது.

இந்த நிலையில்,காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90 பேர் உயிரிழந்தனர் மற்றும் 164க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,782, ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 70,043 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா முனை மற்றும் மேற்கு காசா முனையில் கடுமையான பாதிப்புகள் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் முடிவுக்கு வராத போர் மற்றும் உணவுப் பற்றாக்குறை சமாளிக்க முடியாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் சதஹ்யா அறிவித்துள்ளார்.

மேலும் அவர் பாலஸ்தீன பிரதமரான மஹ்மூத் அப்பாஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் பேட்டியளித்த வர் “மேற்கு மற்றும் ஜெருசலேமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் தீவிரமடைந்து வருவதாகவும், காசாவில் இனப்படுகொலை மற்றும் மக்கள் பட்டினியால் வாடுவதையும் கருத்தில் கொண்டு ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

related posts