பாரிஸ் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும், தாய்ப்பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.