Home இந்தியா ஆந்திராவில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி

ஆந்திராவில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி

by Jey

ஆந்திராவில், இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில், பிற்பகல் 2 மணி வரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

ஆந்திராவில், கோவிட் தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இன்று(ஜூன் 20) மெகா தடுப்பூசி முகாமிற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயது குழந்தை உடைய தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

காலை 6: 00 மணிக்கு துவங்கிய இந்த முகாமில் பிற்பகல் 2 மணி வரை 9,02,308 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலை 6: 00 மணி வரை முகாம் நடைபெற உள்ளதால், இன்று ஒரே நாளில் மட்டும் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இதன் மூலம், மாநிலத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. 1,06,91,200 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது. இதனையடுத்து முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1,33,93,359 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த ஏப்.14ல் ஒரே நாளில் 6,28,961 பேருக்கு ஆந்திராவில் தடுப்பூசி போடப்படடது. இதுவே, தேசிய அளவில் சாதனையாக இருந்தது.

related posts