Home உலகம் இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களுக்காக ஹிந்து மத பல்கலை

இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களுக்காக ஹிந்து மத பல்கலை

by Jey

இந்தோனேஷியாவின் பாலி தீவில் செயல்படும் ஹிந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தி அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோவி விடோடோ உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களுக்காக ஹிந்து மத ஆசிரியர்களால் கடந்த 1993ம் ஆண்டு கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது.

1999 ல் ஹிந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 2004 ல் ஹிந்து தர்ம அரசு நிறுவனம் (ஐஎச்டிஎன்) ஆக மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஐஎச்டிஎன் நிறுவனத்தை பல்கலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு ‛ ஐ கஸ்தி பக்ஸ் சுக்ரிவா ஸ்டேட் ஹிந்து பல்கலை'( யுஎச்என்) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இப்பல்கலை, ஹிந்து உயர்கல்விக்கான அனைத்து அம்சங்களை உள்ளடக்கி செயல்படும். இனிமேல், ஐஎச்டிஎன் மாணவர்கள், யுஎச்என் மாணவர்களாக மாற்றப்படுவார்கள்.

ஐஎச்டிஎன் நிறுவனத்தின் சொத்துகள், ஊழியர்கள் உட்பட அனைத்தும் பல்கலை கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வரப்படும்.

related posts