முழுமையாக கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட கனேடியர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு கொவிட் தடுப்பூசி மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்ட கனேடியர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
கொவிட் தொற்று உறுதி கிடையாது என்ற பரிசோதனை அறிக்கை இருந்தால் எவ்வித தனிமைப்படுத்தல்களுக்கும் உட்படாது நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மத்திய அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள இரண்டு வகை தடுப்பூசிகளையே இவ்வாறானர்கள் ஏற்றியிருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
பைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்கள் இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது தளர்வுகள் வழங்கப்பட உள்ளது.