ரூ.85 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் சிங்கப்பெருமாள் கோயில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருட்டுறைப்பூண்டி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் 6 சரக்கு கிடங்குகளையும் திறந்து வைத்தார்.
மேலும் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.