Home கனடா லண்டன் தாக்குதல்தாரி குறித்த வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

லண்டன் தாக்குதல்தாரி குறித்த வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

by Jey

லண்டனில் இனவெறி அடிப்படையில் தாக்குதல் நடாத்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்த வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் குடும்பம் ஒன்றை இலக்கு வைத்து இனவெறி அடிப்படையில் அண்மையில் வாகனமொன்றை மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதான நதானில் வெல்ட்மான் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

சந்தேக நபருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ தொழில்நுட்பம் ஊடாக வால்ட்மான் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 28ம் திகதி வீடியோ மூலம் வால்;ட்மான் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.

related posts