நடிகர் விஜய் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்பதையும் அவர் கூறினார்.
இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய். இந்நிலையில், புதிதாக உறுப்பினர் சேர்ப்பு அணியை அறிவித்த விஜய், அதற்கு நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த 8ம் திகதி செயலி மூலம் தொடங்கியது.
மூன்றே நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அந்த அணி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார்.