Home இலங்கை எங்களுக்கு சாணக்கியனைப்பற்றி கூறத்தேவையில்லை – வியாழேந்திரன்

எங்களுக்கு சாணக்கியனைப்பற்றி கூறத்தேவையில்லை – வியாழேந்திரன்

by Jey

சாணக்கியனுடைய அநாகரிகமான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் தான் சுமந்திரனுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என இராஜாங்க அமைச்சரும் முற்போக்கு தமிழர் கழக ஒருங்கிணைப்பாளருமான சதாசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இந்த நாட்டிலே யுத்தம் இடம்பெற்றபோது இதே மண்ணிலே தான் நாம் இன்றுவரை இருக்கின்றோம்.ஆனால் சாணக்கியனைப் போல் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நாம் நாட்டிற்குள் வரவில்லை.

இவரைப் பற்றி வரலாறு தெரியாதவர்களுக்கு இவர் யார் என்று கூறலாம்.அதை நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு சாணக்கியனைப்பற்றி கூறத்தேவையில்லை.இங்குள்ள மக்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

related posts